/
இயற்கையளித்த நன்கொடையே தண்ணீர், இங்கே எதற்கிங்கு சண்டையெனக் கேட்டால் தம் தம்வயல்வெளிகள் இருக்கின்ற மாநி லந்தான் வளம்பெறவே வேண்டுமென்னும் பேரா சை தான்அயலாரின் வயல்காய்ந்தால் என்ன, மற்றும் அவர்தமது வயிறுகூடக் காய்ந்தால் என்ன!நயத்தக்க நாகரிகம் சிறிது மின்றி நல்லகைகள் விரித்து(இ)ல்லை தண்ணீ ரென்பார்!மலைபிறந்து கடலடையும் நதிகள் மெல்ல வழிசெல்லும் வழியெல்லாம் மண்வ ளத்தைநிலையாகச் செய்கின்ற நிலத்தை ஆக்கி நன்செய்யும் புன்செய்யும் நன்னி லத்தைதொலையாத தொழிலாக விவசா யஞ்செய் தொடர்நிலமாய்ப் முப்போகம் விளைவிக் கத்தான்விளைநிலங்கள் நதிகளதன் கொடைக ளாக மண்மீது மக்களினை வாழ வைக்கும்.உயிர்காக்கும் நீருக்குப் போராட் டங்கள் உயிர்க்கொலைகள் பொதுச்சொத்து கள்சே தங்கள்உயிரெடுக்கும் மனநிலையில் ரத்தம் சிந்தும் உலகெங்கும் நீருக்காய் அரசி யல்கள்செயற்கையாக நீர்தேக்கி பிறர்க்க ளிக்கா செய்வினையைச் செய்கின்றார் தகுமோ வென்றால்நியாயங்கள் பேசாமல் வன்மு றையை நிறைவாகக் குருதிசிந்தச் செய்தல் நன்றோ!யாவர்க்கும் பொதுவன்றோ நீரும் வானும் யாதுமூரே யாவருமே கேளிர் என்றுயாவர்க்கும் பொதுவான நீதி சொல்லி அகண்டகாவி ரிதன்னையே கல்ல ணையால்யாவர்க்கும் பொதுவாக்க தேக்கி வைத்த அருந்தமிழன் நீருக்காய்க் கெஞ்சி நிற்கயாவர்க்கும் ஆனநீதி மன்றத் தில்கை ஏந்திநிற்கும் அவலநிலை ஆன தின்றே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

